பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
திருவள்ளூர்:ஆடிப்பூரத்தை ஒட்டி திருவள்ளூரில் உள்ள அனைத்து, அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.திருவள்ளூர் தேரடியில் உள்ள, வீரராகவர் பெருமாள் கோவிலில், ஆக, 9 ஆடிப்பூரத்தை ஒட்டி, ஆண்டாள் சன்னிதியில் காலை, 10:00 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை, 5:30 மணிக்கு ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, நான்கு வீதிகளிலும் திருவீதி உலா நடைபெற்றது.தேரடியில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில், திரிபுரசுந்தரி அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகமும், மாலை சந்தன அலங்காரம் செய்யப்பட்டு, வளையல்கள் அணிவிக்கப்பட்டு, தீப ஆராதனை நடைபெற்றது. காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில், பூங்குழலி அம்மனுக்கு அபிஷேகமும், பத்மாவதி தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. அதேபோல், வேம்புலி அம்மன், மூங்காத்தம்மன் மற்றும் பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஊத்துக்கோட்டை: ஆடி மாத நான்காவது வார வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.