பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு ஆக, 9 தேரோட்டம் நடந்தது. ஆண்டாள் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்து திருக்கோஷ்டியூரிலும் இந்த உற்சவம் ஆடியில் நடைபெறுகிறது. ஜூலை 30,காலை கொடியேற்றப்பட்டு,மாலையில், ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் காப்புக்கட்டப்பட்டு, 10 நாள் உற்சவம் துவங்கியது. தினமும் இரவில் தங்கப்பல்லக்கில் ஆண்டாள், பெருமாள் திருவீதி உலா நடந்தது. ஆடிப்பூர உற்சவத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு,ஆக, 9, காலை 10 மணிக்கு பெருமாளும்,ஆண்டாளும் தேரில் எழுந்தருளினர். மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. என்.வைரவன்பட்டியில் வயிரவசுவாமி மகாஉற்சவத்தை முன்னிட்டு,ஆக, 9 தேரோட்டம் நடந்தது.நகர வயிரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மை கோயிலில் எழுந்தருளியுள்ள வயிரவருக்கு, ஆடியில் நடைபெறும் மகா உற்சவம், ஆக.,1ல் காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தினசரி காலையில்,வெள்ளிரதத்தில் சுவாமி புறப்பாடும்,இரவில், வாகனங்களில், பைரவர் திருவீதி உலாவும் நடந்தது.ஆக, 9, ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு,காலை 8 மணிக்கு தேரில்பைரவர் எழுந்தருளினார். மாலை 5.15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் நடந்தது. ஆக, 11 காலை 8 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமிதிருவீதி உலா நடைபெறும்.ஆக.,11ல் காலை 9 மணிக்கு தீர்த்தவாரி,மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெறும்.