மயிலம்:மயிலம் நாகம்மன் கோவிலில் நடந்த ஆடி உற்சவத்தில் பெண்கள் ஊரணி பெங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.மயிலம் ஏரிக்கரை அருகில் உள்ள நாகம்மனுக்கு ஆக, 9 காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் குளக்கரையிலிருந்து கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4 மணிக்கு கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்தனர். இரவு 8 மணிக்கு மலர்களினால் அலங்கரித்த உற்சவர் வீதியுலா காட்சி சிறப்பாக இருந்தது. வாணவேடிக்கை, மேடை நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.