பிள்ளைத் தமிழ் என்பது இலக்கியத்தில் ஒருவகை. தாய்ப்பால் தராத பேச்சாற்றலை, திருச்செந்தூர் முருகனின் திருவருள் தந்த வாய்ப்பால் பெற்ற குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மைக்கு பிள்ளைத்தமிழ் பாடினார். அதை அவர் மதுரை கோயிலில் அரங்கேற்றியபோது, அன்னை மீனாட்சியே குழந்தை வடிவில் வந்து குமரகுருபரருக்கு முத்துமாலை பரிசளித்தாளாம். மதுரை அரசாளும் இந்த நாயகிக்கு, மாணிக்க மூக்குத்தி விசேஷம். அனுதினமும் இரவு 8 மணியளவில் அன்னைக்கு நடைபெறும் பூஜையை, மூக்குத்தி தரிசனம் என்றே போற்றுகிறார்கள். இந்த பூஜையில் கலந்துகொண்டு அன்னையைத் தரிசிக்க, துன்பங்கள் தொலையும்; நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.