திருச்சி: உலக நன்மைக்காக, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் மஹா சுதர்சன ஹோமம் இன்று நடக்கிறது. திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், சக்கரத்தாழ்வாருக்கு தனிசன்னதி உள்ளது. 16 கரங்களுடன் சிறந்த வரப்பிரசாதியாக விளங்கும் இவரை வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சக்கரத்தாழ்வாருக்கு மாதந்தோறும், சுதர்சனரின் ஜன்ம நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தன்று, உலக நன்மை வேண்டி மஹாசுதர்சன ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று காலை, 10 மணி முதல், 12 மணி வரை, மஹாசுதர்சன ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.