பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
கள்திருத்தணி:தணிகாசலம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.திருத்தணி, அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று, மூலவருக்கு காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, தணிகாசலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, திரளான பெண்கள் கோவில் முன் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இதே போல், மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலிலும், ஆடி மாதத்தை முன்னிட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.