பதிவு செய்த நாள்
14
ஆக
2013
10:08
ராமேஸ்வரம் : ஆடித்திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், சுவாமி, பர்வதவர்தினி அம்பாள், ஆக., 16 காலை 6 மணிக்கு கெந்தமாதன பருவதம் மண்டகப்படிக்கு எழுந்தருள உள்ளனர். அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 3 முதல் 4 மணி வரை, ஸ்படிக லிங்க பூஜை நடக்கும். சுவாமி புறப்பாடான பின், கோயில் நடை சாத்தப்படும். கெந்தமாதன மண்டகப்படியில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பாடாகி, இரவு 10 மணிக்கு கோயிலுக்கு வந்தவுடன், நடை திறக்கப்படும். இரவு அர்த்தஜாம, பள்ளியறை பூஜைகள் முடிந்தவுடன், மீண்டும் கோயில் நடை சாத்தப்படும். ""ஆக., 16 ல், கோயில் நடை சாத்தப்படுவதால், தீர்த்தமாடவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை, என, இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.