திருக்கனூர் : கூனிச்சம்பட்டு காலனி மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு காலனி மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றதுடன் துவங்கியது. நேற்று செடல் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.