திருப்போரூர் சங்கோதியம்மன், முத்துமாரியம்மன் கோயில்களில் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2013 10:08
திருப்போரூர் : மேட்டுக்குப்பம் சங்கோதியம்மன் கோவிலில் இன்று பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது. திருப்போரூர் பேரூராட்சி மேட்டுக் குப்பம் கிராமத்தில் பழமையான கோவிலாக சங்கோதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 20 வது ஆண்டு ஆடி விழா கூழ்வார்த்தல் நேற்று நடந்தது. இவ்விழாவையொட்டி அம்மனுக்கு மலர் அர்ச்சனை வைபவம் நடந்தது. இன்று 14 தேதி இரவு 9.00 மணிக்கு தொடங்கி பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. முத்துமாரியம்மன் கோவில் திருப்போரூர் எம்.ஜி.ஆர்., நகர், முத்துமாரியம்மன் கோவிலில் 10வது ஆடி திருவிழா வரும் 16ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. வரும் 17ம் தேதி அம்மன் திருக்குட ஊர்வலம், 18ம் தேதி காலை 10.00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவு 9.00 மணிக்கு அம்மன் வீதியுலா உற்சவம் நடக்கிறது.