காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கள்ளக்கம்பர், வெள்ளக் கம்பர், நல்லக்கம்பர் ஆகிய மூன்று லிங்கங்கள் உள்ளன. இவை முறையே திருமால், பிரம்மன் மற்றும் ருத்ரனால் வழிபடப்பட்டவை. ஓர் ஊழிக் காலத்துக்குப் பிறகு தங்களுக்குரிய முத்தொழிலை சிறப்புறச் செய்வதற்காக சிவலிங்கம் அமைத்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஏகாம்பரநாதரைச் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த லிங்கங்களை வழிபட்டு வரம்பெறலாம்.