திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ, தொலைவில் உள்ளது, பொன்முச்சந்தி. இங்குள்ள விஷ்ணு துர்கா கோயிலில், வளர்பிறை அஷ்டமி திதி நாளில் சிறப்பு யாகம் நடைபெறும். இதில் கலந்துகொண்டு, துர்கையை தரிசிக்க நினைத்தது நிறைவேறும்; சகல சவுபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம். எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆலயத்தில், நவக்கிரகங்கள் நீருக்குள் இருந்து அருள்கின்றனர். ஐந்து தலை நாகத்துடன் சிவபெருமான், ஏழு தலை ஆதிசேஷனுடன் லட்சுமி நரசிம்மர், விநாயகர், ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.