சென்னை கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது வைகுண்டநாதர் கோயில். இந்தக் கோயிலில் தனிச் சன்னதியில், கர்ப்பவதியாக உள்ள சீதாதேவியைத் தரிசிக்கலாம். மேலும், வால்மீகி முனிவரது மடியில் சிறுவர்கள் லவனும், குசனும் அமர்ந்துள்ளவாறு இங்கு காணப்படும் சிற்பமும் அபூர்வமானது. இந்தக் கோயிலில், சீதாதேவிக்கு நடத்தப்படும் வளைகாப்பு உற்சவம் சிறப்பானது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர், சீதாதேவிக்கு வளையல் அணிவித்து வேண்டிக்கொண்டால் விரைவில் வேண்டுதல் நிறைவேறும் என்பது இப்பகுதி பக்தர்களது நம்பிக்கை.