காரைக்குடி : காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலய விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மாலை 5.30 மணிக்கு செபமாலையும், 6 மணிக்கு திருப்பலியும் நடந்தது. 11ம் தேதி நற்கருணை பவனி நடந்தது. நேற்று முன்தினம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேர் பவனி நடந்தது. பங்குதந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். அருள் தந்தை அருமை சிறப்புரை ஆற்றினார். நேற்று திருப்பலி, திருமுழுக்கு அளித்தலுக்கு பின், கொடியிறக்கத்துடன், விழா நிறைவு பெற்றது.