பரமக்குடி: பரமக்குடி அலங்கார மாதா தேர்பவனி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆலய வளாக கலையரங்கில், வளனார் கருணை இல்ல இயக்குநர் பாஸ்டின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை பிரபாகரன் வரவேற்றார். பங்குத்தந்தைகள் சிவகங்கை செயலாளர் சவரிமுத்து, இணை செயலாளர் ஜஸ்டின்திரவியம், கொம்படிமதுரை வரம், அற்புதராஜ், மகிண்டிமிக்கேல்பட்டிணம் அருள்செல்வம், இளையான்குடி ஜெகன், சாலைக்கிராமம் ததேயு, மேலக்காவனூர் ராஜா, சிலுவைக்குமார் பங்கேற்றனர். உதவி பங்குத்தந்தை பாசில் நன்றி கூறினார். திருப்பலிக்குப் பின் இரவு நடந்த அலங்காரமாதா அன்னை தேர்ப்பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நேற்று இரவு 7.30மணிக்கு நிறைவு திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டது.