திருநெல்வேலி: பாளை என்.ஜி.ஓ காலனி வரசக்தி விநாயகர் மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாளை என்.ஜி.ஓ காலனி வரசக்தி விநாயகர் மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தக்கார் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் வரும் செப்டம்பர் மாதம் 16ம் தேதி காலை 5 மணி முதல் 6 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி சிவாச்சாரியார் செல்வம் பட்டர் தெரிவித்த கருத்தை மக்கள் ஏற்று கொண்டு அன்று கும்பாபிஷேகம் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.