செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு தினத்தை ஒட்டி மகா சண்டி ஹோமம் நடந்தது. செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவி லில் மகா கும்பாபிஷேக விழாவின் ஆறாம் ஆண்டு நிறைவையொட்டி சம்வஸ் திரா அபிஷேக விழா கடந்த 17ம் தேதி துவங்கியது. அன்று காலை கோவிலை சுற்றி உள்ள 8 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்தனர். 18ம் தேதி மாலை 6 மணிக்கு மகா சண்டி பூஜை யும், மகா சண்டி ஹோமமும் துவங்கி, நேற்று முன் தினம் முடிந்தது. அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. 4 மணிக்கு ஷேடச உபச்சாரமும் மாலை 6 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.