பதிவு செய்த நாள்
21
ஆக
2013
10:08
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், 6.52 லட்சம் ரூபாய், கோவில் தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது. 10 இடங்களில்... சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது பள்ளிகொண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கு, விடுமுறை நாட்கள், பிரதோஷம் போன்ற விசேஷ தினங்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இவ்வாறு பக்தர்கள் வந்து தரிசனம் முடித்து, அவர்கள் காணிக்கையாக பணம் செலுத்த, வால்மீகீஸ்வரர், பள்ளிகொண்டேஸ்வரர், அன்னை மரகதாம்பிகை சன்னிதி உட்பட, 10 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன.
திறப்பு: பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, சித்தூர் மாவட்ட கோவில்கள் குழு ஆய்வாளர் பனிராஜாசயினா முன்னிலையில், கோவில் மேலாளர் வெங்கடமுனி தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுரேகா, முருகேச ரெட்டி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 6 லட்சத்து, 52 ஆயிரத்து, 275 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.