பதிவு செய்த நாள்
21
ஆக
2013
11:08
ஊட்டி : நீலமலை தெய்வீக நற்பணி மன்றத்தின் 12வது ஆண்டு மகா சங்கட ஹர சதுர்த்தி விழா மற்றும் சுயம்வராகலா பார்வதி ஹோமம் வரும் 24ம் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு மகா சங்கடஹர கணபதி யாகத்துடன் விழா துவங்குகிறது. மாலை 4:00 மணிக்கு சுயம் வரா கலா பார்வதி ஹோமம் நடக்கிறது. இதில், திருமணமாகாத பெண்கள், ஆண்களுக்கு சிறப்பு வழிபாடு, திருமண தடை நீங்க சிறப்பு பிரார்த்தனை, ஏழரை சனி, நாக தோஷம், சனிதோஷம், குடும்ப ஒற்றுமை, காரிய வெற்றிக்கான சிறப்பு ஹோமம் நடத்தப்பட உள்ளது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பஜனை பாடல்களுடன், கருவறை மூர்த்திக்கு 18 விதமான அபிஷேகங்கள் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு செல்வ கணபதி அலங்காரம், மாலை 7:00 மணிக்கு அர்ச்சனை, விக்னேஸ்வர பூஜை, மகா தீபாராதனை, மாலை 7:30 மணிக்கு பிரசாத விநியோகம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.