பதிவு செய்த நாள்
21
ஆக
2013
03:08
திருவக்கரை ஸ்ரீவக்கிரகாளியம்மன் கோயிலில் அருளும் சந்திர மவுலீஸ்வரர் மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார்.
பாபநாசம் அருகே உள்ள திருச்சேலூர்- தேவராயன் பேட்டையில் உள்ள சிவாலயத்தின் முன்மண்டபத்தில், மீன் ஒன்று சிவனாரை வழிபடுவது போன்ற சிற்பத்தைக் காணலாம்.
ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள ஆலயத்தில் காட்சி தரும் சிவலிங்கத் திருமேனியில், அனுமனின் வால் பட்ட தழும்பைக் காணலாம். ஸ்ரீராமன் சிவபூஜைக்காகத் தரையில் பதித்திருந்த சிவலிங்கத்தைக் கைகளால் எடுக்கமுடியாமல் தனது வாலால் கட்டி இழுக்க முற்பட்டராம் அனுமன். அதனால் விளைந்த தழும்பு அது என்கிறார்கள்.
புராணங்கள், தீர்த்தங்கள், மூர்த்திகளால் மட்டுமின்றி, பூஜைகளாலும் சிறப்பு பெற்ற சிவத் தலங்கள் உண்டு. அவை:
காலசந்தி பூஜை: ராமேஸ்வரம்
உச்சிக்கால பூஜை: திருவானைக்கா
சாயங்கால பூஜை: திருவாரூர்
ராக்கால பூஜை: மதுரை
அர்த்தஜாம பூஜை: சிதம்பரம்