திருவண்ணாமலை கோயிலின் 9 கோபுரங்களில் ஒன்று வல்லாளர் கோபுரம். இதன் மாடத்தில் வீர வசந்த வைபோக வல்லாள மகாராஜன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இந்த வல்லாள மகாராஜனுக்கும் சல்லம்மா தேவிக்கும் அண்ணாமலையார் மகவாகி தரிசனம் கொடுத்ததாக புராணம் சொல்கிறது. மகனாக வந்த அண்ணாமலையார் வல்லாளருக்கு வருடம் தோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் திதி கொடுப்பது இன்று நடைபெறுகிறது. திதி கொடுக்க அண்ணாமலையார் பள்ளி கொண்டாபட்டு கிராமம் செல்வார். இந்த வல்லாள மகாராஜனுக்கு ஆண்டுக்கு இருமுறை மாசி மகத்தையொட்டி விழா நடக்கிறது.