வைணவத்தில் ஆன்மாக்களுக்குத் தேவையானதை தாயாரான பெரிய பிராட்டியரே திருமாலிடம் பரிந்துரை செய்கிறாள். இச்செயலை புருஷகாரம் என்று வைணவம் கூறுகிறது. தாயாரின் புருஷகாரம் இல்லாவிடில் பெருமாளின் திருவருள் நமக்கு கிடைக்காது என்பதை வைணவ நூல்கள் உணர்த்துகின்றன. இதனால்தான் வைணவத் தலங்களில் முதலில் தாயாரை வழிபட்டு பின்னர் பெருமாளை சேவிக்கும் வழக்கம் உள்ளது.