பதிவு செய்த நாள்
22
ஆக
2013
11:08
திருவேடகம்: ஏலவார்குழலியம்மன் ஏடகநாதர் சுவாமி கோயிலில், ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு, வறண்ட வைகை ஆற்றில் ஏடுஎதிரேறிய திருவிழா நடந்தது. இக்கோயிலில், காலை 10 மணிக்கு அம்மன், சுவாமி மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகள், ஆடிவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6 மணிக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பின், விநாயகர்,முருகன் சுவாமிகள் சப்பரத்திலும், திருஞானசம்பந்தர் பட்டுப்பல்லக்கிலும், குதிரைவாகனத்தில் அமைச்சர் குலச்சிறைநாயனாரும் ரதவீதியில் பவனி, வைகை ஆற்றில் எழுந்தருளினர். அங்கு "ஏடுஎதிரேறிய தலவரலாறு குறித்து ஓதுவார் குருசாமிதேசிகர் விளக்கினார். பக்தர்கள் திருவாசகம் பாட, தங்கத்தால் வடிவமைத்த ஓலச்சுவடி ஏடை சப்பரத்தில் வைத்து, வறண்ட வைகை ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. ஏடுடன் திருஞானசம்பந்தர் கோயிலுக்கு புறப்பட்டார்.