மதுராந்தகம்: ஜமீன் எண்டத்தூர் பவானி அம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழா சிறப்பாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் கிராமத்தில், பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து, பகல் 2:30 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:45 மணிக்கு, அம்மனுக்கு கும்பம் கலைத்தல் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.