மதுரை: மதுரை பேச்சியம்மன் படித்துறையில், அரவிந்தர் மகரிஷி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வியாபாரிகளுக்கு நிழல்குடை வழங்கும் விழா நடந்தது.விவேகானந்தர் கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பொருளாளர் கூடலிங்கம் முன்னிலை வகித்தார். தையல் தொழிலாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் அழகுமணி வரவேற்றார். இலவச நிழல்குடைகளை நாராயணகுரு கேந்திரம் செயலாளர் குருராகவேந்தர் வழங்கினார். பிராமணர் சங்க மாநில துணைத் தலைவர் இல.அமுதன், மற்றும் பிற அமைப்புகளின் நிர்வாகிகள் ராஜபூபதி செல்வம், பாஸ்கரன், நாகேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். சங்க இணைச் செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.