பதிவு செய்த நாள்
22
ஆக
2013
11:08
சென்னை: சிறுவாபுரியில், நடந்த வள்ளி - முருகன் கல்யாண மஹோற்சவ காட்சிகளின், வீடியோ மற்றும் புகைப்படங்களை, அண்ணாமலையார் இணையதளத்தில் காணலாம். அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் நான்காம் ஆண்டு விழாவையொட்டி, கடந்த 11ம் தேதி, சிறுவாபுரி முருகன் கோவிலில், வள்ளி கல்யாண மஹோற்சவம் நடந்தது. இதில், திருமண தடை நீங்க வேண்டி ஏராளமான பேர் பங்கேற்றனர். இந்த திருமண காட்சிகளின், வீடியோ மற்றும் புகைப்படங்கள், www.annamalaiyar.net இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கேப்டன் "டிவியில் வரும், 27ம் தேதி, காலை 6:30 மணி முதல், 7:00 மணி வரை, "தெய்வ வழிபாடு நிகழ்ச்சியில், சிறுவாபுரி வள்ளி - முருகன் கல்யாண மஹோற்சவ காட்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது.