பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, புதுப்பட்டி, மூக்காரப்பட்டி, கவுண்டம்பட்டி, எருமியாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தேரின் மீது பொறி, கடலை, மிளகு ஆகியவற்றை வீசி தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.