ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பெருமாள்மடை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா, ஆக.,14ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடைசி நாளான நேற்று காலை, முளைப்பாரிகளை கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று, குளத்தில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மாலையில் எருது கட்டு நடந்தது.