வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் ஆவணி அவிட்டத்தை தொடர்ந்து, பூணூல் போடும் விழா நடந்தது. வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் உள்ள சத்திரத்து பெரியவிநாயகர் கோவிலில், நேற்று காலை விஸ்வகர்மா கைவினைஞர்கள் சமூகத்தினர் சம்பத் தலைமையில் இவ்விழா நடந்தது. காமாட்சியம்மன் டிரேடர்ஸ் உரிமையாளர் ஜெயராமன், பெங்களூரார் சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இச்சமூகத்தினர் ஆண்டுக்கு ஒரு முறை பூணூல் புதிதாக போடும் விழா நடந்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 75க்கும் மேற்பட்டோர் பூணூல் போட்டுக் கொண்டனர்.