அவலூர்பேட்டை:பொற்குணம் கிராமத்தில் விநாயகர், முருகன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.மேல்மலையனூர் ஒன்றியம் பொற்குணம் கிராமத்தில் விநாயகர், முருகன், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 26 ம்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. 25ம் தேதி காலையில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை , கணபதி ஹோமமும், மாலையில் வாஸ்து சாந்தியும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆக, 23 வளத்தி கிராம பகுதிகளில் அம்மன் கரிக்கோலம் சுவாமி ஊர்வலம் நடந்தது.