அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழாமூர் ஊராட்சியில், எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆக, 25ம் தேதி தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதி, காப்பு கட்டுதல் நடந்தது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதியுலா சென்றார். ஆக, 25 மாலை 6:00 மணிக்கு, தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது.