பதிவு செய்த நாள்
27
ஆக
2013
11:08
சேலம்: கிருஷ்ண ஜென்மாஸ்டமி விழாவை முன்னிட்டு, ஹரே கிருஷ்ணா கோவில் வளாகத்தில், ஆகஸ்ட், 28ம் தேதி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. கிருஷ்ணர் அவதரித்த திருநாள், கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. சேலம், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரால், (இஸ்கான்) கருப்பூரில் உள்ள ஹரே கிருஷ்ண கோவில் வளாகத்தில், ஆகஸ்ட், 28ம் தேதி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சியில், ஆன்மிக பஜனைகள், உபன்யாசம், அபிஷேகம், ஆரத்தி பிரசாத விருந்து ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மழையால் தடை ஏற்படாமல் இருக்க, மூன்று ஏக்கர் பரப்பளவில், நீர் புகாத பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல், இஸ்கான் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.