விழுப்புரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கஞ்சி வார்த்தல், பால் அபிஷேக விழா நடந்தது.விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கஞ்சி வார்த்தல் விழா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து கஞ்சி ஊர்வலம் புறப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். அரசு சிறப்பு வழக்கறிஞர் சன்னியாசி முன்னிலை வகித்தார்.ஊர்வலத்தை நகராட்சி சேர்மன் பாஸ்கரன் துவக்கி வைத்தார். பின், காலை 10:30 மணிக்கு சக்தி பீடத்தில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.காலை 11:30 மணிக்கு மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோர் பால் அபிஷேகத்தை துவக்கி வைத்தனர். பகல் 12:00 மணிக்கு டி.எஸ்.பி., சங்கர் அன்னதானத்தை துவக்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை சித்தர் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர்.