திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பந்தாடு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி , கோ பூஜை, காப்பு கட்டுதல், புற்று மண் எடுத்து வருதல், முதல் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மூலிகை பூஜை, பிரவேசபலி, பூர்ணாஹுதி, தன பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பிரவேச பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனிவாச சுவாமிகள் மூலம் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். மூலவர் முத்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.