அவிநாசி: அவிநாசி அருகே கூப்பிடு பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.சுந்தரமூர்த்தி நாயனாரால், தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலமான, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் வரலாற்றில் தொடர்புடைய, கூப்பிடு பிள்ளையார் கோவில் அணைப்புதூர் அருகே உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, இரண்டு கால யாக பூஜை நடத்தப்பட்டன; யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர், கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், மூலவ மூர்த்தியான கூப்பிடு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமி, புக்கொளியூராதீனம் காமாட்சிதாச சுவாமி, திருமுருகநாத சுவாமி திருமடத்தின் ஆதீனம் சுந்தரராஜ் அடிகள் ஆகியோர் அருளுரை வழங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.