மதுரை: மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி மாதா சர்ச் திருப்பலி விழா, நாளை மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.பங்குதந்தை அப்போலின் கிளாரட் ராஜ், உதவி பங்குதந்தை செபஸ்டியான் ஜெரோம் கூறியதாவது: திண்டுக்கல் பேரருட்தந்தை ஆரோக்கியசாமி கொடியேற்றுகிறார். ஆக.,30 முதல் செப்.,7 வரை தினமும் ஒவ்வொரு தினமாக கடைபிடிக்கப்படும். இதில், பல்வேறு திருத்தலத்தை சார்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். செப்.,8ல், மதுரை பிஷப் பீட்டர் பெர்ணாண்டோ தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு, சமபந்தி நடக்கும். திருப்பலியின் முடிவில், தேர்பவனியுடன் செப்.,9ல், விழா நிறைவு பெறுகிறது, என்றனர்.