வேடசந்தூர்: வேடசந்தூரில் கடந்த பல மாதங்களாக மழை இல்லை. வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கே மக்கள் அதிக அளவு சிரமப்படுகின்றனர். வேடசந்தூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் பெரிய பள்ளிவாசலிலிருந்து ஊர்வலம் தொடங்கினர். பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமது காசிம், சிறிய பள்ளி வாசல் தலைவர் பஷீர் அகமது, தலை மை வகித்தனர். அரபு அவுலியா தர்க்கா கமிட்டி தலைவர் மல்கர், துணை தலைவர் ஜாபர் அலி, வக்போர்டு இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் உட்பட பலர் பங்கேற்றனர்.