நெல்லையில் ராமர்பாத ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2013 10:08
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷனில் ராமர்பாதம் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நெல்லை ஜங்ஷன் விவேக சம்வர்த்தினி சபாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. திருச்சி கல்யாண ராமன் ஒவ்வொரு தலைப்புகளிலும் சொற்பொழிவு ஆற்றிவருகிறார். இதுவரை பாலகாண்டம், அயோத்தியா காண்டம் தலைப்புகளில் சொற்பொழிவு நடந்து முடிவடைந்ததுள்ளது. நேற்று முதல் ஆரண்ய காண்டம் தலைப்பில் சொற்பொழிவு துவங்கியது. இதைமுன்னிட்டு, ராமர் வனவாசம் சென்றதை நினைவுபடுத்தும் வகையில், நெல்லை திருப்பதி கோயிலில் ராமர் பாதம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோயிலில் இருந்து சொற்பொழிவு நடைபெறும் விவேகசம்வர்த்தினி சபா வரை ராமர் பாதம் ஊர்வலம் நடந்தது. திருச்சி கல்யாண ராமன், ராமர் பாதத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றார். உடன் ஏராளமான பக்தர்களும் சென்றனர்.பின்னர் ராமர்பாதம், விவேக சம்வர்த்தினி சபாவில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆரண்ய காண்டம் தலைப்பில் திருச்சி கல்யாண ராமன் சொற்பொழிவு ஆற்றினார்.