பதிவு செய்த நாள்
28
ஆக
2013
10:08
தேவர்குளம்: தேவர்குளம் சிவன்பெருமாள் கோயில் கொடை விழா நாளை (29ம் தேதி) துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கின்றன. தேவர்குளம் பஸ்ஸ்டாப் மேல்புறம் சிவன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கொடை விழா நாளை (29ம் தேதி) துவங்குகிறது. அன்று மாலை குடியழைப்பு, பாபநாசம், குற்றாலம், திருச்செந்தூர், மேலநீலிதநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வந்து அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 30ம் தேதி காலை செல்வவிநாயகர் கோயில் இருந்து பால்குடம் எடுத்து வந்து வீதியுலா, மதியம் 12 மணிக்கு அபிஷேகம் அலங்காரம், மதியக் கொடை, அன்னதானம், இரவு 9 மணிக்கு பாட்டு கச்சேரி, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. 31ம் தேதி சுவாமிக்கு அலங்காரம் தீபாராதனை, பொங்கலிடுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை சிவன்பெருமாள் கோயில் கொடை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.