பதிவு செய்த நாள்
28
ஆக
2013
11:08
திருநெல்வேலி: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவ திருப்பதிகளுக்கு அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு வரும் 21ம் தேதி 28ம் தேதி, அக்டோபர் மாதம் 6ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் பாளை புதிய பஸ் ஸ்டான்டில் இருந்து ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்கள் வழியாக கருங்குளம், நான்குநேரி மற்றும் திருக்குறுங்குடி சென்று இரவு 8 மணிக்கு பாளை புதிய பஸ்ஸ்டான்ட் வந்து சேருகிறது. இதில் தனி நபர் கட்டணமாக 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வசதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யப்பட்டுள்ளது. தற்போது பிற பகுதிகளில் இருந்து இந்த சிறப்பு தரிசனம் பெற விரும்பும் பக்தர்களின் வசதிக்காக மதுரை (காலை 3 மணி), கோவில்பட்டி (காலை 5 மணி), ராஜபாளையம் (காலை 4 மணி), சங்கரன்கோவில் (காலை 4.45 மணி), புளியங்குடி (காலை 4.30 மணி), தென்காசி (காலை 5 மணி), அம்பாசமுத்திரம் (காலை 5.30 மணி) பகுதிகளில் இருந்து நேரடியாக நவ திருப்பதி கோயில்களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து இயக்கப்பட உள்ள இந்த பஸ்கள் அனைத்திற்கும் ஏற்கனவே உள்ள ஸ்தல தரிசனத்திற்கான 300 ரூபாய் சேர்த்து அந்தந்த இடங்களில் இருந்து நெல்லைக்கு செல்ல மற்றும் திரும்ப சாதாரண கட்டணம் மட்டுமே வ‹லிக்கப்படும். எனவே, பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பொது மேலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.