பருவக்குடி நாகதேவி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2013 10:08
திருவேங்கடம்: சங்கரன்கோவில் தாலுகா பருவக்குடி முக்கு ரோடு நாகதேவி அம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது. பருவக்குடி நாகதேவி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் மாலை கணபதி ஹோமம், கோமாதா பூஜை, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கும்பாபிஷேக நாளன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மற்றும் நாகதேவி அம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கரிவலம்வந்தநல்லூர் லட்சுமி ஏஜென்சி மற்றும் நெல்லை டவுன் வைஷ்ணவி மார்க்கெட்டர்ஸ் தொழிலதிபர்கள் செய்திருந்தனர்.