பதிவு செய்த நாள்
02
செப்
2013
11:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், உறியடி உற்சவம் கோலாகலமாக நடந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா, இரு நாட்கள் கோலாகலமாக நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு, முதல்நாள் இரவு, ஸ்ரீ கிருஷ்ணருக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் வழிபாடு நடந்தது. மறுநாள் மாலை, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்தலசயன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர், மண்டபத்தில், கேடய அலங்காரத்தில் காட்சியளித்தனர். அதைத் தொடர்ந்து கோபுர வாசலில், அவர்கள் வீற்றிருக்க, பொதுமக்கள் உறியடித்தனர். இறுதியில், வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.