கோவில்பட்டி வளனார் தேவாலயத்தில் விவிலிய திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2013 10:09
கோவில்பட்டி: கோவில்பட்டி வளனார் தேவாலயத்தில் விவிலிய திருவிழாவின் துவக்க விழா நடந்தது. கோவில்பட்டி தூய வளனார் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவிலிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா சுமார் ஒருமாதம் நடை பெறும். இந்தாண்டு விவிலிய திருவிழா (செப்.1) துவங்கியது. இதையொட்டி தேவால யத்தில் காலையில் திருச் ஜெபமாலை ஆராதனை நடந்தது. மேலும் கிறிஸ் தவ பக்தி பாடல்கள் ஆராதனையை தொ டர்ந்து இறைமக்கள் கைகளில் விவிலியத்தை ஏந்தியபடி ஆர்சி துவக்கப்பள்ளியில் இருந்து தேவாலயத்திற்கு பவனி யாக வந்த னர். தொடர்ந்து பங்கி லுள்ள 8 அன்பிய மண்ட லத்தை சேர்ந்த ஒருங் கிணைப்பாளர்கள் 8 கொடிகளை ஏற்றினர். மேலும் அமைதியின் சின்னமான புறாவை பங்குத்தந்தை பீற்றர், உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் பறக்கவிட்டு விழாவை துவக்கி வைத்தனர். இதையடுத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு விவிலிய போட்டிகள் துவங்கியது. மேலும் மாலையி லும் போட்டிகள் நடந்தது. விழாவில் பங்குப் பேரவை துணை தலைவர் சின்னத்துரை, அன்பிய ஒருங்கிணைப்பாளர் அமலி, விழா ஒருங் கிணைப்பாளர் சலேத், பங்குப்பேரவையினர், பக்த சபையினர், ஆசிரியர் கள், பங்கு இறைமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.