பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் தாங்கல் கிராமத்தில் உள்ள சுயம்பு நாகம்மன் கோவிலை புதுப் பிக்கும் பணி 3 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. கோவிலுக்கு முன்பாக புதியதாக ராஜகோபுரம் 63 அடி உயரத்திலும், 23 அடி நீளத்திலும், 27 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை 16 அடி கருங்கல் கட்டிலும், 24 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.நவக்கிரகம், அஷ்டலட்சுமி, விநாயகர், முருகன் கோவில் பணிகள் முடிந்துள்ளன. கோவிலின் முன் மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. காமதேனு கோவில், அயரவதம், தாமரை சங்கு மண்டபம் அமைக்கப்பட உள்ளன. ராஜ கோபுரம் மற்றும் கோவில் சிற்ப வேலைகளை மதுரையை சேர்ந்த சிற்பி பாலு தலைமையில் செய்து வருகின்றனர். 16ம் தேதி கும்பாபிஷேகம் திருப்பணிகள் 75 சதவீதம் முடிந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி காலை 8.45 மணிமுதல் 10.15 மணிக்குள் நடக்கிறது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.கோவில் திருப்பணிகளை இந்து அறநிலைய துறை அதிகாரிகள், திருப்பணிக் குழு சரவணன் , அப்பாசாமி, சதாசிவம், பாலமுருகன் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.