பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
விழுப்புரம்: அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கால் 300 ஆண்டுகள் பழமையான, வழுதரெட்டி வரதராஜப் பெருமாள் கோவில் சேதமடைந்துள்ளது. விழுப்புரம் நகராட்சி, 1வது வார்டு, வழுதரெட்டியில் வேணுகோபால் சுவாமி, வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு விழுப்புரம்-திருச்சி பைபாஸ் ரோட்டில் 4 ஏக்கர் நிலமும், எல்லீஸ் சத்திரம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., நகர் அருகே 2 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், வழுத ரெட்டிப் பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க, பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மூலம், 20 லட்சம் ரூபாய், இந்து அற நிலையத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலம் போக, தற்போது பைபாஸ் சாலையை ஒட்டி ஒன்னே முக்கால் ஏக்கரும், எல்லீஸ் சத்திரம் ரோட்டில் 2 ஏக்கர் நிலமும் இக்கோவிலுக்கு உள்ளது.இக்கோவின் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. கோவில் வளா கத்தை சுற்றி முள் புதர்கள் மண்டி கிடக்கின்றன. கோவில் வளாகத்திற்குள் உள்ள கிணறும் சேதமடைந் துள்ளது. பாழடைந்து உள்ள இக்கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வழிபட முடியவில்லை. இந்து அறநிலையத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, சீரழிந்து வரும் இக்கோவிலை புதுப் பிக்க வேண்டும். இக்கோவிலுக்கு சொந்தமான நிலங் களை உரிய முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.