டேராடூன்: உத்தரகண்ட மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலியாயினர். இதனையடுத்து மாநில அரசு பகதர்களின் வருகையை ஒழுங்குபடுத்துவதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் தனியான தொரு ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்டு தோறும் புனித ஸ்தலங்களுக்கு வரும் பயணிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் கேதாரிநாத் வளர்ச்சி ஆணையம் உருவாக்கப்படும். இநத ஆணையம் பக்தர்களி் ன் வருகையை மட்டுமல்லாது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கட்டடங்கள், சாலைகள் மற்றும் வீடுகள் போன்றவற்றையும் சீரமைக்கும் நடவடிக்கை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.