பதிவு செய்த நாள்
05
செப்
2013
10:09
பாலக்காடு: கர்நாடக இசையில் புகழ்பெற்ற, செம்பை வைத்தியநாத பாகவதரின், 117வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம், செம்பை கிராமத்தில், "செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா வரும், 7, 8ம் தேதி நடக்கிறது. விழா, 7ம் தேதி, காலை, 11:30 மணிக்கு துவங்குகிறது. கலாமண்டலம் சிவன் நம்பூதிரி, துவக்கி வைக்கிறார். மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர், சுபைதா இஸ்ஹாக் தலைமை வகிக்கிறார். 12:30 மணிக்கு, வைக்கம் விஜயலட்சுமி குழுவினரின், வீணைக் கச்சேரி நடக்க உள்ளது. கேரளா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும், சங்கீத ஆராதனையும் நடக்கிறது. 8ம் தேதி, செம்பை வித்யா பீடத்தின், 28ம் ஆண்டு மாநாட்டை, கலாமண்டலம் தலைமை அதிகாரி பி.என்.சுரேஷ் துவக்கி வைக்கிறார். கலாரத்னம் விஜயன், செம்பை நினைவு உரையாற்றுகிறார். அதன்பின், மண்ணூர் ராஜகுமாரனுண்ணியின் சங்கீத கச்சேரி அரங்கேற்றம் நடக்கிறது. இரு நாட்களாக நடக்கும் சங்கீத ஆராதனையில், வித்யாபீட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.