பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் மற்றும், அக்னி தீர்த்த கடற்கரையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு "டவர்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயில் மேற்கு, கிழக்கு வாசல், அக்னி தீர்த்த கடற்கரையில் கண்காணிப்பு "டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நேற்று முதல், துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதை எஸ்.பி., மயில்வாகனன் ஆய்வு செய்து, பாதுகாப்பு குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இவர் கூறியதாவது: கோயில் பாதுகாப்பில் 120 போலீசார், சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். பஸ் ஸ்டாண்ட், தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயில் உள்ளிட்ட, ஆறு இடங்களில், சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்படும். மேலும், 24 மணி நேரமும் கண்காணிப்பு டவரில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சந்தேகத்திற்குரிய, அடை<யாளம் தெரி<யாத நபர்கள், வாகனங்களில் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக, வாகனங்கள் கோயிலை சுற்றிவர, தடை விதிக்கப்பட்டு உள்ளது. வி.ஐ.பி., வாகனங்கள், உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று இருந்தால், நான்கு ரதவீதியில் வர, அனுமதிக்கப்படும், என்றார்.