சொரக்காய்பேட்டை: திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகின்றன. இரவு, 7:00 மணிக்கு, அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.