பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
நகரி: காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், பிரம்மோற்சவ விழா, 9ம் தேதி துவங்குகிறது. சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் கிராமத்தில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி உற்சவ விழா மூன்று வாரம் சிறப்பாக நடத்தப்படும். இம்மாதம், 9ம் தேதி முதல், வரும், 29ம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை, மாநில அறநிலைய துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விழா நிகழ்ச்சிகள் வரும், 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, அதிகாலையில், மூலவரான சுயம்பு வரசித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்த பின்னர், அதிகாலை, 4:00 மணி முதல், பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பஸ் வசதி தெலுங்கானா பிரிவினை காரணமாக, ஆர்.டி.சி., போக்குவரத்து ரத்தாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஒட்டி பக்தர்களின் வசதிக்காக, விலக்கு அளிக்கக கோரி, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் கமிட்டியினரிடம் பேருந்துகளை இயக்க கோரி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக, நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.