கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக் கல்யாணம் நடந்தது.காலை 4 மணிக்கு பெருமாள் தாயார் உற்சவ மூர்த்தி களுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். உள் பிரகாரம் வலமாக சென்று பெருமாள் தாயாரையும் மண் டபத்தில் எழுந்தருள செய்தனர். யாகங்கள் வளர்த்து பெருமாள் தாயார் திருக்கல்யாணம் நடந்தது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணம் நடத்தினர்.